சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர்
சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர்,வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதரஸ், விலை 360ரூ.
பிரபலமான ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்பதை பாட நூல் போல அல்லாமல், சுவாரசியமான நிகழ்வுகளைக் கோர்த்து, அவற்றை படிப்பதற்கு சுவை தரும் வகையில் அமைக்க முடியும் என்பதை இந்த நூல் மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் வாழ்வின் சுவடுகளை இந்த நூலில் ஆசிரியர் அழகாக படம் பிடித்துக்கொடுத்து இருக்கிறார்.
செய்தித்தாள் வினியோகப் பணியில் இருந்தபோது, சிறுவனான தனக்கு ‘தினத்தந்தி’ வினியோகம் செய்தமைக்கு 1954-ம் ஆண்டு தீபாவளியன்று காமராஜர் ஒரு ரூபாய் பரிசு வழங்கியதையும் நினைவு கூர்ந்து இருக்கிறார். காமராஜரின் எளிமையான வாழ்வு, அவர் அரசியலில் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு வந்தது, தமிழகத்தின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக அவர் செய்த அரும்பணிகள், மக்களிடம் அன்பாகப் பழகிய தன்மை ஆகிய அனைத்தையும் எடுத்துக்காட்டும் சம்பவங்களைத் தனித்தனி தலைப்புகளில் கொடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது.
காமராஜர் மரணம் அடைவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கடைசியாக சந்தித்த காங்கிரஸ் பிரமுகரின் கருத்தை வெளியிட்டு இருப்பதும், புத்தகத்தின் பல இடங்களில் காமராஜரின் அரிய புகைப்படங்களைக் கொடுத்து இருப்பதும் சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 25/12/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818