இளமையில் வெல்
இளமையில் வெல், செ.சைலேந்திரபாபு ஐ.ஏ.எஸ்., தினத்தந்தி பதிப்பகம், விலை 120ரூ.
ஒரு நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்களை ஆற்றல் படைத்தவர்களான உருவாக்க வேண்டும். அதே வகையில் அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், ஐ.பி.எஸ். அதிகாரி செ.சைலேந்திரபாபு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
இந்த கட்டுரைத் தொடர், தினத்தந்தி இளைஞர் மலரில் வெளியானபோது, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘பூமியில் புதைத்த மரத்துண்டுகளில் அதிக அழுத்தத்துக்கு உள்ளான கரித்துண்டுகளே வைரங்களாக மாறும்’, ‘சுவாசிப்பது போல வாசிப்போம், எப்போதும்’, ‘தனிப்பெருமை வாய்ந்த ஒரு சொத்து உங்கள் புத்தி’ என்பன போன்ற நம்பிக்கை விதைகளை இளைஞர்கள் மனதில் விதைக்கிறார். இந்நூல் இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் கலங்கரை விளக்கம்.
நன்றி: தினத்தந்தி,19-2-20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818