சந்தித்ததும் சிந்தித்ததும்
சந்தித்ததும் சிந்தித்ததும், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 200ரூ.
ஒவ்வொரு கனிக்குள்ளும் ஒரு விதை இருப்பதைப் போலவே ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நிச்சயம் ஒரு கதை இருக்கும். மனதால் பழகினால் அந்தக் கதையை நாம் படிக்கலாம். அப்படி, தான் பார்த்த, தன்னோடு பழகிய மனிதர்களிடம் இருந்து படித்த கதைகளை, சுவாரஸ்யம் குறையாமல் தனக்கே உரிய எளிய நடையில் எழுதியிருக்கிறார் இறையன்பு.
ஒவ்வொரு பக்கமும் பல முகங்களின் அனுபவங்களாக, நகர்கின்றன. முழுமையாகப் படித்து முடித்ததும் நாமே அவர்களோடு பழகியதுபோன்ற உணர்வும், நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமும் இப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கலாம் என்ற தேடுதல் உணர்வும் ஒரு சேர எழுகிறது!
நன்றி: குமுதம்,19.9.2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818