சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள், ஏற்காடு இளங்கோ, யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.388, விலை ரூ.300.

உலகமயமாகி வரும் இந்நாளில் உலக அளவிலான பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் சில உள்ளூர் அளவில் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடப்படும் அதேசமயம், அவற்றுக்கு எதிர்ப்பும் கூட எழுகிறது. உதாரணம், உலக காதலர் தினம். இந்நூல் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான உலக தொழிலாளர் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம், முட்டாள்கள் தினம், உலக புத்தக தினம் போன்றவற்றைப் பற்றிய விவரங்களைத் தருகிறது.

அதுமட்டுமல்லாமல் இதுவரை பலரும் கேள்விப்படாத உலக ஈரநிலங்கள் தினம், சர்வதேச மலைதினம், உலகத் தொலைக்காட்சி தினம், ஓசோன் படலம் பாதுகாப்பு தினம், உலக அகதிகள் தினம் உலகக் கண்பார்வை தினம், உலக கழிப்பறை தினம்  என உலக அளவில் கொண்டாடப்படும் பல தினங்களைப் பற்றிய தகவல்களையும் தருகிறது.

இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உலக தினங்கள் எப்போது கொண்டாடப்படுகின்றன என்ற தகவலுடன் நின்றுவிடாமல், அவை தொடர்பான விவரங்களைக் கட்டுரை வடிவில் இந்நூல் தொகுத்து வழங்கியிருக்கிறது.

உதாரணமாக ஹிரோசிமா – நாகசாகி தினம் பற்றிய கட்டுரை, இரண்டாம் உலகப் போரின்போது 1945 – இல் ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுகளைப் பற்றியும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றியும் சொல்கிறது. இம்மாதிரி போர்களில் ஈடுபடுவதை நிறுத்திவிடவும் ஆலோசனை சொல்கிறது. உலக அளவில் கொண்டாடப்படும் தினங்கள் பற்றிய தகவல்களுடன் அவை பற்றிய தெளிவான பார்வையையும் இந்நூல் வழங்குகிறது.”,

நன்றி: தினமணி, 20/5/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000009212.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *