சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள், ஏற்காடு இளங்கோ, யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.388, விலை ரூ.300. உலகமயமாகி வரும் இந்நாளில் உலக அளவிலான பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் சில உள்ளூர் அளவில் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடப்படும் அதேசமயம், அவற்றுக்கு எதிர்ப்பும் கூட எழுகிறது. உதாரணம், உலக காதலர் தினம். இந்நூல் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான உலக தொழிலாளர் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம், முட்டாள்கள் தினம், உலக புத்தக தினம் போன்றவற்றைப் பற்றிய விவரங்களைத் தருகிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை பலரும் கேள்விப்படாத உலக ஈரநிலங்கள் தினம், […]

Read more

தமிழாய்வு: புதிய கோணங்கள்

தமிழாய்வு: புதிய கோணங்கள், அ.பாண்டுரங்கன், யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.240, விலை ரூ.200. தமிழாய்வுக்கென்று மரபு வழிப்பட்ட சில நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இந்நூலிலுள்ள கட்டுரைகள், தமிழாய்வைப் புதிய கோணத்தில் பார்த்திருப்பதுடன், தமிழாய்வு குறித்து, மரபுவழிப் பேராசிரியர்கள் உருவாக்கியுள்ள பிம்பங்களை உடைத்திருக்கிறது. தமிழ் உரைநடை பாடத்திட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியம் பற்றிய சிந்தனைக்கு இடமில்லை. அது லிட்ரரி கிரிட்டிசிஸம் என்ற பெயரில் போதிக்கப்படுகிறது. அதைக் கற்பிக்கும் பேராசிரியர்கள் ஆங்கில நூல்களை அடியொற்றியே இலக்கியத் திறன், இலக்கிய மரபு என்னும் அடிப்படையில் கற்பிப்பதால், இலக்கிய விமரிசனம் […]

Read more

மாடித்தோட்டம் 77+ வயதினிலே

மாடித்தோட்டம் 77+ வயதினிலே,  ஆர்.எஸ். நாராயணன், யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.168, விலை ரூ.135. இயற்கையான முறையில் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் இல்லாமல் காய்கறிகள், கீரைகள், பழங்களை நமது வீட்டு மாடித்தோட்டத்தில் நாமே உருவாக்கிக் கொள்ள இந்நூல் உதவுகிறது. இயற்கை விஞ்ஞானியாகிய நூலாசிரியர், மாடித்தோட்டம் அமைத்த தனது அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூலைப் படைத்து அளித்திருக்கிறார். மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு எழும் பல ஐயங்களுக்கு இந்நூல் விடை பகர்கிறது. மாடித்தோட்டத்தில் எவற்றை எல்லாம் வளர்க்கலாம்? எவ்வளவு இடம் தேவை? மாடித்தோட்டம் அமைத்தால் […]

Read more