சதுர பிரபஞ்சம்
சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 232, விலை 200ரூ.
“பிரமிக்காதே
பூமியில் தானிருக்கிறது
மலையின் உச்சி”
மலைமேல் ஏற, மலை உச்சியிலிருந்து பயணத்தைத் தொடங்கச் சொல்லும், அனுபூதி உத்தி இக்கவிதைத் தொகுப்பில் அதிகம்.
படிமத்தின் ஆட்சியில் சொல்ல வரும் கருத்துக்களை காட்சிப்படுத்திவிடுகிறார் கவிஞர். சமூகம், காதல், நடப்பியல் ஆன்மிகம், எள்ளல், பிரபஞ்சத் தேடல்கள் என்று அடர்த்திமிக்க கவிதைத் தொகுப்பு.
நன்றி: குமுதம், 31/5/2017.