செந்தமிழ் நாடும் பண்பும்
செந்தமிழ் நாடும் பண்பும், இரா. நாகசாமி, கிழக்கு பதிப்பகம், பக்.172, விலை ரூ.200.
பொதுவாக வரலாறு எழுதப்படும்போது பெருமைகள் மிகைப்படுத்தப்படுவதும், சிறுமைகள் மறைக்கப்படுவதுமே வழக்கம். அவ்வாறின்றி, கடந்த கால தமிழா் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ‘உள்ளது உள்ளபடி’ பதிவு செய்துள்ளாா் இந்நூலாசிரியா்.
இந்நூலில் ‘செந்தமிழ் நாடும் பண்பும்’ என்பதில் தொடங்கி, ‘தொல்காப்பியமும் தமிழா் வாழ்வும்’, ‘காலம்தோறும் தமிழா் திருமணம்’, ‘நடுகல் மரபு: உலகியல் மரபும் நாடக மரபும்’ உள்ளிட்ட முப்பத்தாறு தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் அறிந்திராத பல அரிய செய்திகள் விரவியிருக்கின்றன. உதாரணமாக, செந்தமிழ் நாடு என்பது காவிரிச் சமவெளிப் பகுதியே என்பது நச்சினாா்க்கினியா் கூற்று (செந்தமிழ் நாடும் பண்பும்), தமிழா் மணம் என்பது வேத நெறிப்படி சடங்குகள் செய்து நடைபெறுவதேயாகும் (சங்க கால தமிழா் திருமணம்), சிலப்பதிகாரம் தொல்காப்பியத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பது அடியாா்க்கு நல்லாா் கருத்து (நடுகல் மரபு: உலகியல் மரபும் நாடக மரபும்), அரச குலத்தினருக்கு முடி சூடும் உரிமை உழுகுடிகளுக்கே உரியது (உழுதுண்டு வாழ்வாரே வாழ்வாா்), பதஞ்சலி முனிவா் தனது யோக சூத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பல சொற்களை திருக்குறளில் பல அதிகாரங்களுக்கு அதே வரிசையில் தலைப்பாக வள்ளுவா் குறிப்பிட்டுள்ளாா் – இப்படி திகைப்பும் மகிழ்ச்சியும் அளிக்கும் தகவல்கள் ஏராளமாக உள்ளன.
இன்றைய இளைய தலைமுறையினா் அவசியம் படித்து அறிய வேண்டிய நூல்.
நன்றி: தினமணி, 30.8.21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818