செர்னோபிலின் குரல்கள்
செர்னோபிலின் குரல்கள், ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச், தமிழில் சித்தார்த்தன் சுந்தரம், எதிர் வெளியீடு, விலை 300ரூ.
‘இனி நீ தேர்வு செய்ய வேண்டியது என்ன? வாழ்வா, சாவா? நல்லாசியா, சாபக்கேடா? நியும் உன் சந்ததியும் வாழ்ந்திட, வாழ்வையே தேர்வுசெய்!’ என விவிலியத்தில் ஒரு அர்த்தமுள்ள வசனம் வரும். ‘செர்னோபிலின் குரல்கள்’ சொல்ல வருவதும் அதையே. அணு உலைகளின் பத்திரம், பாதுகாப்பு பற்றிய கேள்விகள் பெருகி வழிகின்றன. ‘ஆக்கபூர்வ காரியங்களுக்குத்தான் அணுசக்தி என்பது ஒரு மாயை’ என இதில் தெளிவாகிறது.
ஓய்ந்துபோன கூடங்குளம் போராட்டம், புதிய அணுஉலைகளுக்கு அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி இப்போது செய்துகொண்ட ஒப்பந்தம் என நெருக்கடியான ஒரு சூழலில், உலகை உலுக்கிய இந்தப் புத்தகம் தமிழில் வெளிவருவ்து நெற்றிக்கண்ணைத் திறப்பது போன்றதாகும்.
செர்னோபில் அணுஉலை விபத்தில் பாதிப்பக்கப்பட்டவர்களின் நேரடி அனுபவங்கள், பட்ட துயரம், பயங்கர நிமிடங்களை அவர்களின் வார்த்தைகளிலே படிக்கிறபோது, அணுவைப் பற்றி நாம் கருதி வந்தவை அர்த்தமற்றுப் போய்விடுகின்றன. ஸ்வெட்லானா உலக மக்களுக்கு அளித்த கொடை இந்தப் புத்தகம்.
2015ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்த நூலிற்காக ஸ்வெட்லானா பெற்றுள்ளார்.
நன்றி: குங்குமம், 27/6/2016.