சேது காப்பியம்
சேது காப்பியம், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், விலை 600ரூ.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தன் வாழ்க்கை அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில், “சேது காப்பியம்” (கவிதை வடிவில்) எழுதி வருகிறார். இப்போது 8-வது பகுதி வெளிவந்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப்போர் வெடிப்பதற்கு முன்பே, தமிழ்ஈழ விடுதலையை வலியுறுத்தி அமெரிக்காவில் மாபெரும் மாநாடு நடத்திய டாக்டர் பஞ்சாட்சரம் பற்றி இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரை “மா.கோ.ரா” என்றே குறிப்பிடுகிறார், பெருங்கவிக்கோ.
ஒரு இடத்திலாவது எம்.ஜி.ஆர். என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டால் பொதுமக்கள் புரிந்துகொள்ள உதவுமே.
நன்றி: தினத்தந்தி, 29/3/2017.‘