சிகரம் தொட்ட சாதனையாளர்கள்
சிகரம் தொட்ட சாதனையாளர்கள், புதுகை மு.தருமராசன் , புதுகைத் தென்றல், விலை 90ரூ.
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், எழுத்தாளர் வல்லிக்கண்ணன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்பட 13 சாதனையாளர்கள் பற்றி புதுகை மு.தருமராசன் எழுதிய புத்தகம். “நயனுறு நடைச்சித்திரம்” – சிகரம் தொட்ட சாதனையாளர்கள். இனிய நடையில் ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி, 21/12/2016.
—-
நெடுஞ்சாலை வாழ்க்கை, விகடன் பிரசுரம், விலை 175ரூ.
நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்களைப் பற்றிய கட்டுரைகள். நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி டிரைவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களை கா. பாலமுருகன் இந்த நூலில் அருமையாக எடுத்துக்கூறியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 21/12/2016.