சிக்குவானா? சிக்குவாளா?
சிக்குவானா? சிக்குவாளா? , ஜோதிர்லதா கிரிஜா, கவிதா பப்ளிகேஷன், பக்.160; ரூ.125;
சமூகக் கதைகளையும், குடும்பக் கதைகளையும் எழுதி வந்த ஜோதிர்லதா கிரிஜா, ஓர் அருமையான துப்பறியும் நாவலை எழுதியுள்ளார். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் யார் கொலை செய்தது என்ற புதிர் வெளிப்படாமல் வெகு நேர்த்தியாக எழுதியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் மணவாளனும், சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணுவும் கொலைகாரன் யார் என்று எல்லா கோணங்களிலும் துப்பறிந்து கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்.
கலாவதி என்கிற பெண் கொல்லப்படுகிறாள். இறந்த அவளின் மூடிக் கிடந்த கைகளில் இருந்த ஒரு பேனா மூடி, அவளை யார் கொன்றது என்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு தடயமாக இருக்கிறது. அந்தத் தடயத்தை வைத்துக் கொண்டு அவளைக் கொன்றது யார் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். நாவலின் கதாபாத்திரங்களின் உருவாக்கமும், அவர்களின் தனிப்பட்ட பண்புகளும், உரையாடல்களும் இயல்பாக இருக்கின்றன. புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரின் நாவல் என்கிற உணர்வு, படிக்கும்போதே நம்முள் அழுத்தமாகப் பதியும் வகையில் எழுதப்பட்டுள்ள அருமையான நாவல்.
நன்றி: தினமணி, 17/4/2016.