சொல்லில் நிரம்பும் குளம்

சொல்லில் நிரம்பும் குளம், எஸ்ஸார்சி, சொல்லங்காடி, பக்.144 , விலை ரூ.130.

நூலாசிரியரின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பு. இதில் 18 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

பொங்கலுக்குப் படைக்க வாங்கிய கரும்பு வீணாகிறதே என்று அதைக் கடித்துச் சுவைத்து, பல் டாக்டருக்கு ரூ.12 ஆயிரம் அழும் சர்க்கரை வியாதிக்காரனின் கதை ‘சின்னத்தனம் 39’. ஓர் எழுத்தாளர், வட இந்தியக் கவிஞரின் புகழுரைக்கு மயங்கி அவருடைய 100 கவிதைகளை மொழிபெயர்த்து, அதனை தனது கைக் காசைச் செலவழித்து புத்தகமாக வெளியிட வேண்டிய நிர்பந்தத்திலும் சிக்கி அவதிப்படும் கதை ‘தாட்சண்யா39‘’.

தொகுப்பில் குறிப்பிடத்தக்க கதைகளில் ’வடு39’; முக்கியத்துவம் பெறுகிறது. தான் வாங்கி வரச் சொன்ன வாழைப்பழத்தைப் பெற்றுக் கொள்ளாது பஸ் ஏறி விடுகிறார், மகளிர் தினக் கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர். ஒரு சீப் ரஸ்தாளி பழத்தைச் சைக்கிள் கேரியரில் வைத்து நசுக்கி வீடு வந்து சேர்கிறார் கூட்டத்தை நடத்திய வங்கி ஊழியர். மனைவியிடம், உனக்குன்னுதான் வாங்கி வந்தேன் 39; என்று கூசாமல் பொய் சொல்கிறார். யதார்த்தமான படைப்பு.

எழுத்தாளன் எந்த ஒரு சமூக நிகழ்வையும் அவனுக்கே உரிய கோணத்தில் காண்கிறான். தன்னுடைய மனப்பட்டறையில் அந்த நிகழ்வைச் சோதித்து அதை மீண்டும் காட்சிப்படுத்துகிறான். தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அந்த ரகத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

நன்றி: தினமணி, 2/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *