சொல்லில் நிரம்பும் குளம்
சொல்லில் நிரம்பும் குளம், எஸ்ஸார்சி, சொல்லங்காடி, பக்.144 , விலை ரூ.130. நூலாசிரியரின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பு. இதில் 18 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பொங்கலுக்குப் படைக்க வாங்கிய கரும்பு வீணாகிறதே என்று அதைக் கடித்துச் சுவைத்து, பல் டாக்டருக்கு ரூ.12 ஆயிரம் அழும் சர்க்கரை வியாதிக்காரனின் கதை ‘சின்னத்தனம் 39’. ஓர் எழுத்தாளர், வட இந்தியக் கவிஞரின் புகழுரைக்கு மயங்கி அவருடைய 100 கவிதைகளை மொழிபெயர்த்து, அதனை தனது கைக் காசைச் செலவழித்து புத்தகமாக வெளியிட வேண்டிய நிர்பந்தத்திலும் சிக்கி அவதிப்படும் கதை […]
Read more