வேட்டைக்கத்தி
வேட்டைக்கத்தி, ச. ஆறுமுகம், ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோவில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை 606806, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-9.html
4 மொழிபெயர்ப்புக் கதைகள் கொண்ட புத்தகம். அதில் 2 கதைகள் ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பிறகு ஆங்கிலத்தில் இருந்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. பொதுவாக, மொழிபெயர்ப்பு கதைகள் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருக்கும். கலாச்சார வேறுபாட்டினால் அந்தக் கதைகள் நம் மனதைக் கவருவதில்லை. ஆனால் ச. ஆறுமுகத்தின் திறமையான மொழி பெயர்ப்பினால் இதில் உள்ள கதைகள் புரிந்து கொள்ளும்படியும் ரசிக்கும்படியும் உள்ளன.
—-
குறையொன்றுமில்லை, கம்பம் புதியவன், சொல்லங்காடி, 2/35, அறிஞர் அண்ணா காலனி, தெற்கு மாட வீதி, திருவொற்றியூர், சென்னை 19, விலை 50ரூ.
குழந்தைத் தொழிலாளர் அவலம், முதிர்கன்னியர் துயரம், கையூட்டு, வரதட்சணை, அரசியல் சீர்கேடு, போன்ற பல விஷயங்களை ஹைக்கூ கவிதையாக தந்திருக்கிறார் ஆசிரியர் கம்பம் புதியவன். மாசற்ற மலர்கள் மலர்ந்து சிரித்தன அரசு தொட்டிலில் என்பது போன்ற ஒவ்வொன்றும் 3 வரி ஹைக்கூ கவிதைகள் கவனத்தை ஈர்க்கின்றன.
—-
ஆதிபர்வம், திருமுருக. கிருபானந்தவாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 80ரூ.
ஆதிபர்வம் என்பது மகாபாரதத்தின் முன்பகுதியாகும். அதில் பல தகவல்கள் நாம் அறியாதவை. அதை சுவைபட இந்த நூலில் விளக்கியுள்ளார் திருமுருக. கிருபானந்தவாரியார். நன்றி: தினத்தந்தி, 15/5/2013.
