இனிய இலக்கியம்
இனிய இலக்கியம், டாட்ர். வெ. திருவேணி, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை 5, விலை 80ரூ.
தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் அமைவுகள், அங்கிருக்கும் ஓவியங்கள், சிற்பங்கள் பற்றிய அரிய தகவல்கள், இந்த புத்தகத்தில் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. தமிழ்மொழியின் பெருமைமிக்க சங்க நூல்கள், அற நூல்கள், பழைய காப்பியங்கள், தமிழிசை இசைக்கலை ஆகியவற்றையும் நயமாக எடுத்தக்கூறியுள்ள பாங்கு புத்தக பிரியர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
—-
ஆதிபர்வம், திருமுருக. கிருபானந்தவாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 80ரூ.
ஆதிபர்வம் என்பது மகாபாரத்தின் முன்பகுதியாகும். அதில் பல தகவல்கள் நாம் அறியாதவை. அதை சுவைபட இந்த நூலில் விளக்கியுள்ளார் திருமுருக. கிருபானந்தவாரியார்.
—-
குறையொன்றுமில்லை, கம்பம் புதியவன், சொல்லங்காடி, 2/35, அறிஞர் அண்ணா காலனி, தெற்கு மாட வீதி, திருவொற்றியூர், சென்னை 19, விலை 50ரூ.
குழந்தைத் தொழிலாளர் அவலம், முதிர் கன்னியர் துயரம், கையூட்டு வர தட்சணை, அரசியல் சீர்கேடு, போன்ற பல விஷயங்களை ஹைக்கூ கவிதையாக தந்திருக்கிறார் ஆசிரியர் கம்பம் புதியவன். மாசற்ற மலர்கள் மலர்ந்து சிரித்தன என்பது போன்ற ஒவ்வொன்றும் 3 வரி ஹைக்கூ கவிதைகள் கவனத்தை ஈர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 15/5/2013