ஸ்ரீ சாயி சித்திர சரிதம்
ஸ்ரீ சாயி சித்திர சரிதம், இளஞாயிறு மாணிக்கம், இளங்கோ கோ, மாணிக்கம், தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயில், விலை 360ரூ.
ஷீரடி சாயி பாபா மற்றும் அவரது பக்தர்களின் வாழ்வில் நடந்த 150 நிகழ்வுகள், வண்ணப்படங்களுடன் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஓவியத்தின் கீழே, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சாயி பாபா தனது 16-வது வயதில் ஷீரடிக்கு வந்து தவம் செய்தது. எண்ணெய் கலந்த தண்ணீர் ஊற்றி விளக்கை எறிய வைத்தது, எங்கோ நெருப்பில் விழுந்த குழந்தையை வேறு இடத்தில் இருந்தபடி காப்பாற்றியது போன்ற பல அதிசய நிகழ்வுகள் தத்ரூபமான படங்களில் தரப்பட்டு இருக்கின்றன. சாயி பாபாவின் உயிரோட்டமான படங்கள், அவரது பக்தர்களை மட்டுமின்றி அனைவரையும் கவரும்.
நன்றி: தினத்தந்தி, 29/3/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818