ஸ்ரீராமானுஜர் 1000 ஆண்டுகள்
ஸ்ரீராமானுஜர் 1000 ஆண்டுகள், எஸ்.சுந்தரேசன், சாந்தி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரல் 1017-ம் ஆண்டு பிறந்து, 1137-ம் ஆண்டுவரை வாழ்ந்த ஸ்ரீ ராமானுஜர் வைணவக் கொள்கைகளை நிலை நிறுத்தியவர் என்று கொண்டாடப்படுகிறார். அவர் குல வேறுபாடு பார்க்காமல், கீழ் சாதி, மேல் சாதி என்ற பேதம் இல்லாமல் ஆற்றிய சமயத் தொண்டுகள் பற்றி மிக விரிவான தகவல்கள் தக்க சான்றுகளுடன் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.
திருப்பதி கோவிலில் இருக்கும் சிலை சிவனா, விஷ்ணுவா என்ற சர்ச்சை எழுந்தபோது, அந்த சிலை விஷ்ணுதான் என்ற ஸ்ரீ ராமானுஜர் நிரூபித்திருக்கிறார் என்பது போன்ற வியப்பான தகவல்களும், அவரது வாழ்க்கை சரிதம் முழுவிவரமும் இடம் பெற்றுள்ள இந்த நூல், வைஷ்ணவ பக்தர்களின் பொக்கிஷமாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 28/3/2018.