சூபி கதைகள்

சூபி கதைகள், யூமா வாசுகி, என்.சி.பி.எச்., பக்.101, விலை 90ரூ.

சூபி ஞானிகள் ஜென் ஞானிகளைப் போல எதையும் அனுபவத்தின் வழியேயும், வாழ்க்கை முறைக்கு உணர்த்த வேண்டிய கருத்துக்களை எளிமையாகச் சொல்வதன் வழியேயும் பலவற்றைச் சொல்லி இருக்கின்றனர்.

சின்னஞ் சிறுகதைகளாக, ஒரு பக்கத்திற்கும் குறைவாகவே உள்ள பல சிறுகதைகள் இதில் உள்ளன. பல கதைகள் வேடிக்கையான நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன. ஆட்டுக்கு ஆளைத் தெரியும்.

அடிமை, மூவர், மரணம் முதலிய கதைகள் இத்தகையன. அறவுரையும், அறிவார்ந்த எண்ணங்களை வெளிக் கொணரும்படியான கருத்துக்களும் அடங்கிய கதைகளும் இதில் உள்ளன. இளஞ்சிறார்களும் படித்துப் பயன் பெறலாம்.
யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள இந்நுால், சிறியவர்களும், பெரியவர்களும் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

வெறும் பொழுதுபோக்கு என்பதையும் சில உரைகளை எழுப்பிய வண்ணம் அமைந்துள்ள இந்நுாலைப் பாராட்டலாம்.

– இராம.குருநாதன்

நன்றி: தினமலர், 3/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *