அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை

அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை,  ய.சு. ராஜன், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர்,  பதிப்பாசிரியர் – சிற்பி பாலசுப்பிரமணியம்; அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், பக்.724, விலை ரூ.600. விண்வெளித்துறையில் அப்துல்கலாமுடன் பயணித்த, அவரது நெருங்கிய நண்பரான விண்வெளி விஞ்ஞானி யக்ஞசுவாமி சுந்தர்ராஜன் என்கிற ய.சு. ராஜன் மற்றும் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயரும் இணைந்து அப்துல்கலாமைப் பற்றிய பலரும் அறியாத தகவல்களின் களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் உயர்ந்ததற்கான பின்னணியை இந்நூல் விளக்குகிறது. கலாமின் […]

Read more

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், நந்தினி பதிப்பகம், விலை 240ரூ. திருக்குர்ஆன் அறிவியல் சார்ந்த கருத்துகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கிய கருவூலமாகத் திகழ்கிறது. இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனில் உள்ள அறிவியல் சார்ந்த கருத்துக்களைத் திரட்டி அவற்றோடு இன்றைய அறிவியல்   சிந்தனைகளைத் தொடர்புபடுத்தி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சகோதரர் முத்து மீரா லெப்பையின் மகள். இந்த நூலில் அவர் திருக்குர்ஆனின் தோற்றம், அறிவியல் பொருள் விளக்கம், இறைமறையும் […]

Read more