ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்புச் செல்

ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்புச் செல், இரா.சர்மிளா, காவ்யா, விலை 120ரூ. நமது உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் செல்களால் ஆனவை என்பதையும், அந்த செல்களில், ‘குருத்தணு’ எனப்படும் ஸ்டெம் செல்களின் சிறப்புகளையும் சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் தந்து இருப்பதைப் பாராட்டலாம். ஸ்டெம் செல்கள் என்றால் என்ன? அவை நமது உடலில் ஆற்றும் பணிகள், ஸ்டெம் செல்களை சேமித்து வைத்து அதன் மூலம் நோய்களை குணப்படுத்துவது எவ்வாறு? ஸ்டெம் செல் வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பது போன்ற பல வினாக்களுக்கு பயனுள்ள […]

Read more

மரபணு என்னும் மாயக்கண்ணாடி

மரபணு என்னும் மாயக்கண்ணாடி, இரா.சர்மிளா, காவ்யா, பக்.112, விலை ரூ.120. உயிரினங்களின் இயக்கத் திறனுக்கு காரணமாக இருக்கும் மரபணு குறித்து இந்நூல் பேசுகிறது. மரபணு ஆராய்ச்சி நடைபெற்றது எப்போது? அதைக் கண்டறிந்தது யார்? என்பன போன்ற பல சுவாரசியமான தகவல்கள் நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. மரபணுவின் அமைப்பு, குரோமோசோமின் அமைப்பு, புரத உற்பத்தி, மரபணு மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் என பல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் மரபணு ஆராய்ச்சி எந்த அளவுக்கு உதவும் என்பது குறித்து இந்நூலின் மூலம் நாம் தெரிந்து கொள்ள […]

Read more