உபசாரம்

உபசாரம், சுகா, தடம் பதிப்பகம், பக். 151, விலை 130ரூ. மனிதர்களை கவனிக்கும் சுகாவின் ரசனைதான் ‘உபசாரம் தொகுப்பின் அடிநாதம். அது சினிமாவாகட்டும், படித்த நாவலாகட்டும், சாப்பிடப் போன விருகம்பாக்கம் ஹோட்டலாகட்டும், திருநெல்வேலி விருந்தாகட்டும், பெரிய எழுத்தாளர், ஆரம்ப எழுத்தாளராகட்டும் அவர்களின் மனதை அறிந்து, அதை எழுத்தில் தந்து நம்மையும் அங்கே பயணிக்க வைத்துவிடுகிறார். முதலில் இவர் தன் மனதை திறந்து வைத்திருக்கிறார் என்பதையே இவ்வனுபவக் கட்டுரைகள் உணர்த்துகின்றன. எழுத்தில் நெருடல் இல்லாத நகைச்சுவை இயல்பாய் வந்துவிட்டாலே எழுத்துக்கு ரசிகர்கள் பெருக்கம் உருவாகிவிடும். சுகாவுக்கு […]

Read more

உபசாரம்

உபசாரம் ,சுகா, தடம் பதிப்பகம், பக்.152, விலை ரூ.130. திரைப்படத்துறையில் பணியாற்றும் நூலாசிரியர் எழுதிய 18 அனுபவம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திரைப்படத்துறையில் உள்ள படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலருடனான நூலாசிரியரின் அனுபவங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. நடிகை கல்பனா இவரை உடன் பிறவாத தம்பியாகக் கருதிப் பழகியது, வேலை நேரத்தில் முரண்பாடுகள் எழுந்தாலும் இவர் எடுக்கப் போகும் படத்தில் நடிக்க நடிகர் கலாபவன் மணி விரும்பியது, இவருக்கும் இவருடைய “வாத்தியார்‘’ பாலு மகேந்திராவுக்கும் உள்ள அன்புமிக்க அனுபவங்கள் என நெகிழ […]

Read more

உபசாரம்

உபசாரம், சுகா, தடம் பதிப்பகம், விலை 130ரூ. திரைப்பட இயக்குனரும், பாலுமகேந்திராவின் மாணவருமான சுகா, பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம். சொல்ல விரும்பும் விஷயத்தை தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்கிறார் “தூங்காவனம்” படத்துக்கு வசனம் எழுதியவர் அல்லவா? எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு பற்றியும், இறுதிச் சடங்கு பற்றியும் எழுதியுள்ள கட்டுரை உள்ளத்தை உருக்குகிறது. மயானத்தில் கூடியிருந்தவர்கள் சுமார் நூறு பேர்தான் என்பதை படிக்கும்போது நெஞ்சம் கனக்கிறது. எனினும், “மகாகவி பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை விட சுமார் 6 மடங்கு அதிகம்தான்” […]

Read more