உபசாரம்

உபசாரம், சுகா, தடம் பதிப்பகம், பக். 151, விலை 130ரூ.

மனிதர்களை கவனிக்கும் சுகாவின் ரசனைதான் ‘உபசாரம் தொகுப்பின் அடிநாதம். அது சினிமாவாகட்டும், படித்த நாவலாகட்டும், சாப்பிடப் போன விருகம்பாக்கம் ஹோட்டலாகட்டும், திருநெல்வேலி விருந்தாகட்டும், பெரிய எழுத்தாளர், ஆரம்ப எழுத்தாளராகட்டும் அவர்களின் மனதை அறிந்து, அதை எழுத்தில் தந்து நம்மையும் அங்கே பயணிக்க வைத்துவிடுகிறார்.

முதலில் இவர் தன் மனதை திறந்து வைத்திருக்கிறார் என்பதையே இவ்வனுபவக் கட்டுரைகள் உணர்த்துகின்றன. எழுத்தில் நெருடல் இல்லாத நகைச்சுவை இயல்பாய் வந்துவிட்டாலே எழுத்துக்கு ரசிகர்கள் பெருக்கம் உருவாகிவிடும். சுகாவுக்கு அது கைவந்த கலையாக உள்ளது. உபசாரம் நம்மை உபசரிக்கும் நூல்.

நன்றி: குமுதம், 25/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *