சிறுவர் கதைப் பாடல்கள்

சிறுவர் கதைப் பாடல்கள், கிருங்கை சேதுபதி, சாகித்ய அகடமி, விலைரூ.230 ஆடிப் பாடும் சிறுவர்களுக்கு கதை கேட்பது கொண்டாட்டமாய் இருக்கும். அதுவும் பாடல் வழியே கதை சொல்லத் தொடங்கினால் சேர்ந்து பாடுவர். குழந்தைக் கவிஞர்களின், பல்சுவை கதைப் பாடல்கள் தீபாவளியின் தினுசு தினுசு பட்சணங்களாய் இந்த நுாலில் தரப்பட்டு உள்ளன. பல்சுவையுடன் சுவைத்து மகிழலாம். எலி, பூனை, சிங்கம், முயல், ஆமை, பாம்பு, யானை போன்ற விலங்குகளும், கொசு, கோழி, காக்கை, குருவி, மயில், மைனா போன்ற பறவைகளும், கடவுளும் கதைகளில் வந்து கவர்கின்றன. […]

Read more

காந்தி வந்தால் ஏந்தும் கருவி

காந்தி வந்தால் ஏந்தும் கருவி, கிருங்கை சேதுபதி,  கபிலன் பதிப்பகம், பக்.184, விலை ரூ.175. தினமணி நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்த வற்றில் 28 தலைப்புகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. வாழ்வியல் நடைமுறையில் மறைந்த சிலவற்றையாவது மீண்டும் பின்பற்ற வேண்டியதன் அவசியம், சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர், பாரதிக்கு இனி புகழ் சேர்க்க அவருக்கு விருது தேவையில்லை; அவரது பெயராலே விருது வழங்குவதுதான் சிறப்பு என்பன போன்ற பல கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இயற்கையை பேணுதல், ஒழுக்கம், உளவியல், கல்வி, இலக்கியம் […]

Read more

யாதும் ஊரே

யாதும் ஊரே – 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்; பதிப்பாசிரியர்கள்: ப.முத்துக்குமார சுவாமி, கிருங்கை சேதுபதி, சொ.அருணன்; தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், பக்.800. விலை ரூ.1000. தமிழகம், அயலகம் எனும் இரு பகுப்புகளை உடையதாக இம்மலர் மலர்ந்துள்ளது. தமிழர்க்கு, மொழி வளர்ச்சி, இலக்கணம், வரலாறு, கலை, இலக்கியம், சமயம், அறிவியல், அயலகம் ஆகிய ஒன்பது பெருந் தலைப்புகளில் இம் மாநாட்டு மலர் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொல் தமிழின் மாண்புகள், தமிழரின் தொல் மரபு தொடங்கி அறிவியல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தற்போது கணினித் […]

Read more