மனித தெய்வம்!

மனித தெய்வம்!, கே.சித்தார்த்தன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.160. சில நாடகங்கள் படிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும். சில நடிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும். இது படிக்கவும் நடிக்கவும் ஏற்ற நாடகம். பாடல்களும் உண்டு. வழக்கமான கதை தான் என்றாலும் காட்சியமைப்பில் விறுவிறுப்பை கூட்டி எழுதியிருக்கிறார். காதலித்தவனை மணக்க முடியவில்லை. காதலித்தவனை இன்னொருத்தி மணப்பதற்கு ஒரு ட்விஸ்ட் வைத்து இருக்கிறார். நாடகத்தை காட்சி அமைப்பு, நடிகர்களின் பட்டியல் என 50 காட்சிகளாக எழுதி இருப்பது சிறப்பு. எத்தனை பேர் நடிக்கத்தேவை; அதில் எத்தனை பெண் பாத்திரங்கள் என்ற விளக்கக் குறிப்பு சிறப்பாக […]

Read more

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன்

இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன், கே.சித்தார்த்தன், மணிமேகலைப்பிரசுரம், விலை 150ரூ. வடநாட்டு மன்னர்கள் பலரை முறியடித்து, இமயமலையில் சோழர்களின் புலிக்கொடியை நாட்டியது, காவிரியின் குறுக்கே பலம்வாய்ந்த கல்லணையைக் கட்டியது போன்ற அரிய செயல்களால் அழியாப்புகழ் பெற்ற மன்னர் கரிகாலனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்த நாடகம். விறுவிறுப்பான சினிமா படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களையும் சேர்த்து, நாடகத்தை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும் பாங்கு, கரிகாலனின் நல்ல குணங்களை படம்பிடித்துக் காட்டுவது போன்ற […]

Read more

சீர்மிகு சீவக சிந்தாமணி எளிய வடிவில்

சீர்மிகு சீவக சிந்தாமணி எளிய வடிவில், கே.சித்தார்த்தன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி எளிய வடிவில் புதுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணி காப்பியத்தின் முதல் பகுதியை அப்படியே கையாண்டு, பின் பகுதியில் கட்டியங்காரனின் மனைவி மங்கையர்க்கரசி, அன்னபூரணி போன்ற கற்பனைப் பாத்திரப்படைப்புகளைக் கொண்டு கதை சுவாரசியமாக பின்னப்பட்டு இருக்கறிது. கதை முழுவதையும் நாடக வடிவில் கொடுத்து இருப்பதோடு, ஒவ்வொரு காட்சியின் விவரமும் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது. கட்டியங்காரன் நடத்தும் சூழ்ச்சிகள், கடைசியில் […]

Read more