கண்ணன் கதை

கண்ணன் கதை, ருக்மணிசேஷசாயி, சாயி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. நவீன மொபைல் போன் மற்றும் கணினியில் மூழ்கி கிடக்கும் நம் குழந்தைகள், நம் நாட்டு இதிகாசங்களின் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அதிலும், மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், மனிதன் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை, ‘பகவத் கீதை’ என்ற பாடமாக நமக்கு தந்தவர் கிருஷ்ணர். இந்த நுாலில் இடம்பெறும் கிருஷ்ணரின் அவதாரத்தின் இளம் பருவ வரலாற்றை, சிறுவர்கள் […]

Read more

பாப்பாவுக்குப் பாட்டு

பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ. பாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது. உறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் […]

Read more