ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்

ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம், சிங்கம்பட்டி பெ.மாடசாமி, மணிமேகலை பிரசுரம், பக். 196, விலை 170ரூ. அரசு பணி அனுபவம் சுவாரசியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பணி காலத்தில் நடந்த வழக்குகள் குறித்து, 21 தலைப்புகளில் விளக்குகிறார். ஒரு சம்பவம்: இரவு ரோந்து போலீசார் எதிரே வர, அவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்க, பங்களா வீட்டு சுவர் ஏறி குதித்து மறைகிறார் ஒரு திருடன். அது, நடிகர் ரஜினிகாந்த் வீடு என தெரியாமல் புகுந்து நகை, பணம் திருடி செல்கிறார். […]

Read more

காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்

காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள், சிங்கம்பட்டி பெ.மாடசாமி, மணிமேகலை பிரசுரம், பக். 200, விலை 125ரூ. காவல்துறை பணி ஒரு சவால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை. காவல்துறையினர் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதை பலரும் சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஒரு கொலை, திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதை நேரடியாக கேட்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அந்த வகையில், போலீஸ் அதிகாரி மாடசாமி, தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள், மற்ற போலீசார் கண்டுபிடித்த குற்றங்களை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் தந்துள்ளார். இந்த புத்தகத்தை […]

Read more

காக்கியின் டைரி

காக்கியின் டைரி, சிங்கம்பட்டி பெ.மாடசாமி, நேசம் பதிப்பகம், விலை 200ரூ. ‘தேடுதலாக’ தேடிய தகவல்களின் தொகுப்பு நூல். அதில் விசித்திர வழக்கு, விநோத மனிதர், அரிய நிகழ்வு, அபூர்வ சம்பவம், வேடிக்கை,,, விநோதமென… – ‘இப்படியா? இருக்குமா? நடக்குமா? நடந்ததா?’ என்கிற கேள்விக்குறிகள் பல ஆச்சரியக்குறியாய் எழ, சிக்கின சிக்கல் வழக்குகள் சில. அவைகளை அருமையாக பரபரப்பூட்டும் செய்தியாக பதிவு செய்திருக்கிறார் உதவி ஆணையராக ஓய்வு பெற்ற சிங்கம்பட்டி பெ. மாடசாமி. அன்றாடச் செய்திகளில், இப்படியெல்லாம் ஏமாற்றுவார்களா? இப்படியும் ஏமாறுவார்களா? மற்றும் நினைத்துப் பார்க்க […]

Read more