சென்றுபோன நாட்கள்

சென்றுபோன நாட்கள், எஸ்.ஜி.இமானுஜலு நாயுடு, ஆ.இரா வேங்கடாசலபதி வெளியீடு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 125ரூ. இதழியல் பக்கங்கள் தன் 17வது வயதில் பத்திரிகை தொடங்குவது என்பதை யாரேனும் நினைத்துப்பார்த்திருக்க முடியுமா? 1904ல் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு நினைத்துப் பார்த்ததுடன் பிரஜாநுகூலன் என்ற மாத இதழையும் ஆரம்பித்திருக்கிறார். இந்த இதழை நடத்தினாலும் சுதேசமித்திரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதியவராகவும் பங்களித்தவராகவும் இவர் இருந்திருக்கிறார். 1926ல் இவர் ஆசிரியராக அமர்ந்த ஆநந்தபோதினி இவருக்குப் பேரும் புகழும் பெற்றுத்தந்தது.1934ல் இந்தப் பத்திரிகையிலிருந்து விலகிய கொஞ்சநாளிலேயே இவர் மரணம் அடைந்தார். […]

Read more