மதுரை நகரக் கோவில்கள்

மதுரை நகரக் கோவில்கள், டி.வி.எஸ்.மணியன், அமராவதி பதிப்பகம், பக். 200, விலை 130ரூ. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார் அவ்வையார். கோவில் நகரம் என்றே அன்று முதல் இன்று வரை போற்றப்படுவது மதுரை மாநகரம். இங்குள்ள, 20 கோவில்களின் விபரங்களை இந்த நுால் அழகுடன் விளக்குகிறது. இலக்கிய வளமும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க, மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர் கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்களின் விளக்கங்கள் அருமை. மதுரை மீனாட்சி கோவிலில், குலசேகரப் பாண்டியன் வரலாறு, 64 […]

Read more

குக்கூ குக்கூ ஹைக்கூ

குக்கூ குக்கூ ஹைக்கூ, டி.வி.எஸ்.மணியன், மணிமேகலைப் பிரசுரம், பக். 88, விலை50ரூ. ஜப்பானிய ஹைக்கூ இலக்கணம், பின்னாளில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அவர்களுடைய மொழிகளில் ஹைக்கூ கவிதைகளாக எழுதும்போது, பின்பற்ற முடியாமல் போனது போலவே, நுாலாசிரியர், ஹைக்கூ வடிவத்தை தன் கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ப, சொல்லாட்சியுடன் திறம்பட எழுதியுள்ளார். ‘பாகன் வீட்டு அடுப்பெரிய/ தெருவில் யாசகம்/ யானை’ (பக்., 30’ என, யானையை வைத்து பிழைப்பு நடத்துவதையும், ‘மகன் கானகம்/ கணவன் வானகம்/ கைகேயி வரம்’ (பக்., 33) என ராமாயணச் சுருக்கத்தையும், ‘நுாறை விட/ […]

Read more

மதுரை நகரக் கோயில்கள்

மதுரை நகரக் கோயில்கள், டி.வி.எஸ். மணியன், அமராவதி வெளியீடு, பக். 200, விலை 130ரூ. மதுரை நகரத்திற்குள் அமைந்திருக்கும் கோயில்கள் பற்றி கூறும் நூல். மதுரைக் கோயில்களை காண விரும்புவோருக்கும் ஆராய விரும்புவோருக்கும் இந்நூல் ஒரு நல்ல வழிகாட்டி. கோயில்களை அறிமுகம் செய்யும் அதே வேளையில் கோயில் வரலாறு, கோயில் சார்ந்த மன்னர்கள் வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, நம்பிக்கை, புராணப் பின்புலங்கள் என்று அனைத்தையும் நமக்கு எடுத்துக்காட்டிவிடுகிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more