பாயும் தமிழகம்

பாயும் தமிழகம், சுசீலா ரவிந்திரநாத், தமிழில் எஸ்.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், விலை 400ரூ. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி பற்றி நுட்பமாகவும், ஆழமாகவும் விவரிக்கும் புத்தகம். டி.வி.எஸ். குழுமம், முருகப்பா குழுமம், இந்தியா சிமெண்ட், ஸ்ரீராம் குழுமம், சன்டிவி, அப்பல்லோ மருத்துவமனை முதலியவற்றின் வரலாற்றையும், சாதனைகளையும் சுசீலா ரவிந்திரநாத் ஆங்கிலத்தில் எழுதியதை, எஸ்.கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு மட்டும் அல்ல, புதிதாக தொழில் தொடங்கி சாதனை படைக்க விரும்புவோருக்கும் இது பயனுள்ள கையேடு. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

பாயும் தமிழகம் – தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு

பாயும் தமிழகம் – தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு, சுசிலா ரவீந்திரநாத், தமிழில்: எஸ்.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. தமிழகத் தொழில்துறை வளர்ச்சியை விவரிக்கும் ஆவணமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. தமிழகத்தின் ஆரம்பகாலத் தொழில்நிறுவனங்களான முருகப்பா குழுமம், டிவிஎஸ் குழுமம், அமால்கமேஷன்ஸ் குழுமம், எம்ஆர்ஃஎப், இந்தியா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தொடக்கம், வளர்ச்சி, அவற்றின் இன்றைய நிலை வரை இந்நூல் விவரிக்கிறது. தொழிலைத் தொடங்கியவர்களின் பின்புலம், அதற்காக தொழில்முனைவோர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் கூறப்பட்டுள்ளன. அதற்குப் பின்பு ஸ்ரீராம் குழுமம், அப்பல்லோ மருத்துவமனை, […]

Read more