திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு
திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. திராவிட இயக்கத்திற்காக, நூற்றுக்கணக்கில் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அதுபற்றிய முழு விவரங்களையும் இந்த நூலில் கூறுகிறார் முனைவர் அ.மா.சாமி. வெறும் புள்ளி விவரங்களோடு நின்றுவிடவில்லை. பல சுவையான வியப்புக்குரிய செய்திகளையும் இந்த நூல் விவரிக்கிறது. மாதிரிக்கு ஒன்று. திராவிடன் தினசரிப் பத்திரிகை நடத்தி வந்த வகையில், ரூ.1000 கடனுக்காக, 2.6.2993ல் பெரியாரை கைது செய்து, சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அக்கடனைக் கட்டிவிட, பெரியாரின் நண்பர்கள் முன்வருகிறார்கள். […]
Read more