திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு
திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், விலை 150ரூ.
திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. திராவிட இயக்கத்திற்காக, நூற்றுக்கணக்கில் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அதுபற்றிய முழு விவரங்களையும் இந்த நூலில் கூறுகிறார் முனைவர் அ.மா.சாமி. வெறும் புள்ளி விவரங்களோடு நின்றுவிடவில்லை. பல சுவையான வியப்புக்குரிய செய்திகளையும் இந்த நூல் விவரிக்கிறது. மாதிரிக்கு ஒன்று. திராவிடன் தினசரிப் பத்திரிகை நடத்தி வந்த வகையில், ரூ.1000 கடனுக்காக, 2.6.2993ல் பெரியாரை கைது செய்து, சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அக்கடனைக் கட்டிவிட, பெரியாரின் நண்பர்கள் முன்வருகிறார்கள். ஆனால் பெரியார் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்தச் செய்தி, அப்போது மதுரையில் இருந்து வெளிவந்த வெடிகுண்டு என்ற வார இதழில் பிரசுரமாகியுள்ளது. இப்படி பல நிகழ்ச்சிகளைக் கூறுகிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.
—-
தமிழகத்தின் திருக்கோயில்கள், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், முதல்பாகம் 200ரூ, இரண்டாம் பாகம் 120ரூ, மூன்றாம் பாகம் 100ரூ. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற 264 கோவில்களைப் பற்றிய தலபுராணம். அந்தந்த கோவில்களின் தனிச் சிறப்பு அம்சங்கள், அங்கு நடைபெறும் விழாக்களின் விவரம், ஒவ்வொருகோவிலும் அமைந்து இருக்கும் இடம் ஆகிய அனைத்தும் இந்தப் புத்தகத்தின் மூன்று தொகுதிகளில் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்மிக பக்தர்களுக்கு பயன் உள்ள புத்தகங்கள். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.