நூலகத்தால் உயர்ந்தேன்

நூலகத்தால் உயர்ந்தேன், கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், பக்.1096, விலை ரூ.1200. எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் எழுத்துலகில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பவர் இந்நூலின் ஆசிரியர். அவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே நூல்களின் மீது அளப்பரிய காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். பத்தாவது படிக்கும்போது பகல் உணவுக்காக அவருடைய தந்தை தந்த நான்காணாவில் மீதம் பிடித்து, பழைய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறார். சென்னை பல்லாவரத்தில் இருந்த கார்டன் உட்ராப் தோல் தொழிற்சாலையில் 1959 ஆம் ஆண்டு நாள் கூலி இரண்டு ரூபாய் கிடைத்த வேலையை […]

Read more

நூலகத்தால் உயர்ந்தேன்

நூலகத்தால் உயர்ந்தேன், முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கம், வசந்தா பதிப்பகம், விலை 1200ரூ. தமிழ்நாட்டில், நூலகத்துறை வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கம். கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் மோகனரங்கம். அவர் தனது வாழ்க்கை வரலாற்றை “நூலகத்தால் உயர்ந்தேன்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். காரணம், தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நூலகங்களில் கழித்திருக்கிறார். நூலில் ஏராளமான தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றிய விவரங்களையும் விரிவாக எழுதியுள்ளார். எனவே, இந்த நூல் மூலம் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல, பலருடைய வாழ்க்கையைப் பற்றி அறிய முடிகிறது. குறிப்பிட்டுச் சொன்னால், […]

Read more