மொழியின் நிழல்

மொழியின் நிழல், ந.பெரியசாமி, தேநீர் பதிப்பக வெளியீடு, விலை: 180. படைப்பின் ஊற்றுக்கண்ணைத் தேடும் முயற்சி கவிதை, நாவல், சிறுகதைத் தொகுப்புகள், நிகழ் நாடகங்கள், சுயசரிதங்கள், மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் பற்றிக் கவிஞர் ந.பெரியசாமி எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு ‘மொழியின் நிழல். இந்தப் புத்தகங்கள் தரும் அனுபவங்கள் பற்றி நிதானமாகப் பேசுவதோடு, அந்தந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல், சமூகப் போக்கையும் பதிவுசெய்யும் எழுத்து முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் பெரியசாமி. புத்தகங்கள் தரும் அனுபவங்களை இரண்டு விதங்களில் இவர் வெளிப்படுத்துகிறார். முதலாவதாக, தன்னுடைய அனுபவம் சார்ந்த நிகழ்வுகளின் வழியாக விவரிப்பது. […]

Read more

தோட்டாக்கள் பாயும் வெளி

தோட்டாக்கள் பாயும் வெளி, ந.பெரியசாமி, புது எழுத்து வெளியீடு, விலை 70ரூ. மதுவாகினியின் சுவடுகள் பெரியசாமியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. எளிய சொற்கள் மூலம் பெரியசாமி கட்டியெழுப்பும் காட்சிகள் அசாதாரணமானவை. இறந்தவர்களெல்லாம் பறவைகளாகிவிடும் மரணமற்ற ஊர், ஆசிரியரைக் கேலிச்சித்திரமாக்கும் சிறுமி. தற்கொலைக்கு முயல்கிறவனுக்குக் குழந்தைகளாகத் தெரியும் ரயில்பெட்டி, பசுவின் நிழலை வளர்ப்பவன், மேகத் துண்டைத் தலையணையாக்கும் சிறுவன், துணை வானத்தைச் சிருஷ்டிக்கும் சிறுமி, அக்டோபர் முதல்நாள் திக்விஜயம் செய்யும் காந்தி… என்று மாறுபட்ட காட்சிகள் வழியே பரந்துபட்ட தளத்தில் நமது வாசிப்பை சாத்தியப்படுத்துகிறார். […]

Read more