ஆனைமலைக் காடர்கள்

ஆனைமலைக் காடர்கள், முனைவர் ஜே.ஆர்.லட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 164, விலை 300ரூ. உலகில் மிகவும் தொன்மையானவர்கள் என்று கருதப்படும் ஆதிகுடியினர் இன்றும் காடுகளில் மலைவாழ் மக்களாகவே வசித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆனை மலையில் வாழும் காடர்கள் இன்றைய நாகரிகம் வளர்ந்த நிலையிலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்கின்றனர். அவர்களின் வரலாறும் தொன்மையும் வாய்மொழிச் சான்றுகளாகவே உள்ளன. சுதந்திர இந்தியாவில், இன்னும் சுதந்திரம் அடையாதவர்களாக வாழும் காடர்களின் வாழ்க்கையை களஆய்வு செய்து உணர்வுபூர்வமாகப் படைக்கப்பட்ட நுால் இது. ஜவ்வாது […]

Read more

ஆனைமலைக் காடர்கள்

ஆனைமலைக் காடர்கள், முனைவர் ஜே.ஆர். லட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், விலை 300ரூ. ஆனைமலைக் காடர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் குடில்களின் அமைப்பு, உணவுப் பழக்கங்கள், திருமணம் செய்யும் முறை, திருவிழா பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்த நூலில் முனைவர் ஜே.ஆர். லட்சுமி பதிவு செய்துள்ளார். ‘இவர்களுக்கு கல்வியறிவு, இடஒதுக்கீடு பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்’ என்ற வேதனையையும் அவர் இதில் வெளிப்படுத்தி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள்

தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள், பேராசிரியர் முனைவர் ஜே.ஆர். இலட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 228, விலை 150ரூ. பழையாறை மாநகரின் ஒரு பகுதிதான் இன்றைய தாராசுரம் என்னும் பேரூர். ஐராவதீச்சுரம் கோவிலில் இடம்பெற்றுள்ள, சிற்ப வடிவங்கள் பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தை பின்பற்றியே அமைந்திருப்பதை படங்களுடன் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 6.8.2017.

Read more