திராவிட இயக்க இலக்கிய வரலாறு

திராவிட இயக்க இலக்கிய வரலாறு, முனைவர் ப.கமலக்கண்ணன், காவ்யா வெளியீடு, பக். 223, விலை 230ரூ. தமிழ்ச் சமுதாயத்தில் பல நுாறு ஆண்டுகளாக, ஆழமாக வேரூன்றிப் புரையோடிப் போன மடமைகள், பழமைகள் ஆகியனவற்றை நகைப்புக்கு உள்ளாக்கிப் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவை திராவிட இயக்க படைப்பாளிகளின் படைப்புகளும், அவர்தம் இலக்கிய ஆய்வுகளுமாகும். திராவிட இயக்கப் படைப்பாளர்கள் தம் படைப்புகளில் சமூக நீதி, வகுப்பு வாரி உரிமை, மொழி மானம், இன மானம், பெண்ணுரிமை, தமிழ் மொழி வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு போன்ற கோட்பாடுகளை உள்வாங்கி ஜாதி, […]

Read more

நாம் திராவிடர்

நாம் திராவிடர், முனைவர் ப.கமலக்கண்ணன், காவ்யா, பக்.408, விலை 400ரூ. கொள்கையில் விடாப்பிடியாக இருந்து சாதனைகள் பல செய்தவர் ஈவெ.ரா., அதற்காக எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயங்காதவர். நுால் முழுவதும் அவரது எண்ணம், கொள்கை, விளக்கம் பெறுகின்றன. இந்த நுாலில், ‘மொழி பற்றிய தமது எண்ணங்களில், தமிழ் மொழியைச் செம்மை செய்து, உலக அரங்கில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும் (பக். 53) என்கிறார். ஆனால் ‘காட்டுமிராண்டி’ என்ற அவரது கருத்தையும், தாய்மொழி குறித்த அவரது புலமையையும் இதில் எழுதியிருந்தால், ‘திராவிடக் கண்ணோட்டம்’ எது […]

Read more

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும்

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும், முனைவர் ப. கமலக்கண்ணன், காவ்யா, விலை 150ரூ. திராவிட இயக்கம் சமூக நீதி, இட ஒதுக்கீடு, தமிழ்மொழி ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு களப் போராட்டங்களை முன்னின்று நடத்தியது. திராவிட மொழியியலின் தந்தை என அழைக்கப்படும் கால்டுவெல் ‘தமிழ் மொழி தனித்து இயங்கும் வல்லமைமிக்கது’ என்று முதன் முதலாகக் கூறினார். தமிழில் பிற மொழிக் கலப்புக்கு எதிராக மறைமலையடிகள், திரு.வி.க. தேவநேயப் பாவாணர் போன்ற மூத்த தமிழறிஞர்கள் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தனர். திராவிட இயக்கம் மற்றும் தனித்தமிழ் இயக்க வரலாற்றை […]

Read more