இக்கால இந்தியா மற்றும் கல்வி

இக்கால இந்தியா மற்றும் கல்வி,  வி.நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.190, விலைரூ.120. பி.எட். பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய இந்திய கல்வி பற்றி எழுதப்பட்டுள்ள நூல். பல்வேறு இனம், மொழி, நிலப்பரப்பு, பொருளாதார, கலாசார வாழ்க்கைகள் கொண்ட பன்முகத்தன்மை உள்ள ஒரு நாட்டில், பலதரப்பட்ட மக்களுக்கும் ஒரே விதமான கல்வியைக் கொடுப்பதில் உள்ள சிக்கல்களை நூல் ஆராய்கிறது. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த குழந்தைகள் இடையிலேயே படிப்பை நிறுத்திவிடுவது, அல்லது அடுத்த வகுப்புக்குப் போக முடியாமல் தேர்வில் தோல்வியடைந்து தேங்கிவிடுவது, பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் உள்ள […]

Read more

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, வி. நடராஜன், சாந்தா பப்ளிஷிர்ஸ், சென்னை, பக். 336, விலை 200ரூ. குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை எப்படி வளர்க்க வேண்டும்? என்று வழிகாட்டும் நூல். குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்கு அவர்களுக்கு சிறந்த சூழ்நிலை அமைய வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் பெற்றோரே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வளரும் காலத்தில் தன்னுடன் பிறந்தவர்களுடன் குழந்தைகள் சண்டை போடுவார்கள். சாப்பிட மாட்டார்கள். எந்தப் பொருளையும் உடைத்துவிடுவார்கள். சில குழந்தைகள் பிற குழந்தைகளுடன் நன்றாகப் பழக மாட்டார்கள். பெரியவர்களின் கவனத்தைத் […]

Read more

வரலாறு கற்பித்தலில் புதுமைகள்

வரலாறு கற்பித்தலில் புதுமைகள், வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 320, விலை 200ரூ. ஆசிரியர் பணிக்குப் படிப்பவர்களுக்காக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின்படி வரலாறு கற்பிப்பதைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல். வரலாறு கற்பித்தலில் புதுமைகள் என்று தலைப்பு இருந்தாலும், கற்பித்தலில் இன்றைய புதுமை எப்படி படிப்படியான வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டது என்பதை நூல் விளக்குகிறது. கிரேக்க, ரோமானிய, இடைக்கால, மறுமலர்ச்சி கால, நவீன கால வரலாற்று எழுத்தாண்மைகளை நூல் விளக்குகிறது. இந்தியாவிலும்கூட கல்ஹனா, அபுல்பஃஸல் காலத்திலிரந்து அர்.சி. மஜும்தார் […]

Read more