காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேங்கள்

காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேங்கள், ஸ்ரீதர் சாமா, விருட்சம் வெளியீடு, விலை 90ரூ. காஞ்சி மகா பெரியவரின் கருணை மொழிகளையும் பக்தர்கள் வாழ்வில் அவர் நடத்திய அற்புதங்களையும் சொல்லும் புத்தகம். பலருக்கும் தெரிந்த, தெரியாத விஷயங்களின் தொகுப்பு. படிக்கப் படிக்க சிலிர்க்கிறது. பண்பும் பக்தியும் மனதுக்குள் மலர்கிறது. நன்றி : குமுதம், 25/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வழங்க வளரும் நேயங்கள்

வழங்க வளரும் நேயங்கள்,-ஸ்ரீதர்-சாமா,விருட்சம் வெளியீடு, பக்.161, விலை ரூ.120. தமிழ் இலக்கியத்தில் சிறுகதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக்கும் தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது. இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார். நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக்கின்றன. நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும், சடங்குகளாக நடைபெறும் பாராட்டு நிகழ்வுகளையும் தமது முதல் கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் நூலாசிரியர், வாக்கு எனும் கதையில் அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்கும் தேவியின் […]

Read more

வழங்க வளரும் நேயங்கள்

வழங்க வளரும் நேயங்கள்,  ஸ்ரீதர்-சாமா, விருட்சம் வெளியீடு, பக்.161, விலை ரூ.120. தமிழ் இலக்கியத்தில் சிறுகதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக்கும் தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது. இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார். நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக்கின்றன. நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும், சடங்குகளாக நடைபெறும் பாராட்டு நிகழ்வுகளையும் தமது முதல் கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் நூலாசிரியர், ‘வாக்கு‘ எனும் கதையில் அம்மாவின் அரவணைப்புக்கு […]

Read more

ஸ்ரீரமண அருள் வெள்ளம்

ஸ்ரீரமண அருள் வெள்ளம், ஸ்ரீதர் – சாமா, விருட்சம் வெளியீடு, பக். 100, விலை 70ரூ. பகவானைப் பற்றிய பல அருமையான தகவல்கள் அடங்கிய நுால். படிப்போரின் ஆன்மிக உணர்வுகள் பெருகும். ‘நீங்கள் என்னை ஒரு உடம்பாகப் பார்க்கிறீர்கள். நான் ஒரே நேரத்தில், 20 லோகங்களில், 20 சரீரத்தில் வசிக்கிறேன்’ என்று சொன்ன ரமணர் ஒரு அதிசய புருஷர். பகவான் அதிசயங்களைப் பெரும்பாலும் தவிர்த்ததுடன் தன் சீடர்களும் அவற்றைப் பிரசாரம் செய்யக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார். பல அதிசயங்கள் அவர் முன்னர் அரங்கேறின. […]

Read more