உலகில் ஒருவன்

உலகில் ஒருவன், குணா கந்தசாமி, தக்கை, பக். 144, விலை 120ரூ. ஐந்து வயது சிறுவனின் பார்வையில்… ‘மெமோய்ர்ஸ்’ என்ற இலக்கிய வகைப்பாடு, தமிழுக்குப் புதியதில்லை என்ற முன்னுரையோடு (தன்னுரை) கதைக் கூறத் துவங்குகிறார் குணா. ஐந்து வயது சிறுவன்தான், நாவலின் தலைவன். அவனுடைய பத்து வயது வரையிலான வாழ்க்கைச் சூழலை, அந்தச் சிறுவனின் உலகத்திலிருந்து, அவனுடைய பார்வையிலேயே சொல்வதுதான் இந்த நாவல். ஏற்கனவே இந்தப் பகுதியில், ரத்த உறவு, சூரிய வம்சம், கூளமாதாரி, வெலிங்டன் போன்ற நாவல்களை நூலாசிரியர், பட்டியலிடுகிறார். ஆனால், என்னைப் […]

Read more

அயோத்தி இருண்ட இரவு

அயோத்தி இருண்ட இரவு, கிருஷ்ஜா, தீரேந்திரஜா, விடியல். ராமன் மசூதிக்குள் நுழைந்த கதை அயோத்தி கடந்த இருபதாண்டுகளாக நீறுபூத்த நெருப்பாகவும், அவ்வப்போது கனன்று எழுந்தும் அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வரும் வாக்குவங்கி ஈர்க்கும் காந்தமாகவும் இருக்கிறது. இதற்காக எவ்வாறு திட்டமிடப்பட்டு பாபர் மசூதியில் ராமன் என்கிற கடவுளைக் கொண்டு வந்து மசூதியுடன் தொடர்புப்படுத்தினர் என்கிற வரலாற்றை விளக்கும் இந்நூல் இன்றைய காலகட்டத்தின் மிகத் தேவையான அரசியல் நூல் என்கின்றனர் விடியல் பதிப்பகத்தார்.   —-   அடிப்படைவாதத்தின் வேர்கள், தாரிக் அலி, பாரதி புத்தகாலயம் […]

Read more