அதிர்வுகள்

அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ், விகடன் பிரசுரம், விலை 160ரூ. இலங்கையில் புகழ் பெற்ற தமிழறிஞர் ஜெயராஜ். தலைசிறந்த பேச்சாளர், “கம்வாருதி” என்று புகழ் பெற்றவர். அவர் எழுதிய சிறந்த கட்டுரைகள் கொண்ட இந்த புத்தகத்தை, சிறந்த பெக்கிஷம் என்று கூறினால் அது மிகையல்ல. சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளும், மெய்சிலிர்க்கச் செய்யும் கட்டுரைகளும், நெஞ்சை ஊடுருவும் கட்டுரைகளும் பொன்னும் வைரமுமாக ஜொலிக்கின்றன. கம்பவாருதி ஜெயராஜின் பேச்சைக் கேட்டு மயங்கியவர்கள், இந்தக் கட்டுரையைப் படித்தால் நெகிழ்ந்துவிடுவார்கள் என்பது நிச்சயம். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

அதிர்வுகள்

அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள், விகடன் பிரசுரம், பக்.290, விலை ரூ.160. சிறந்த ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவாளரான இலங்கை ஜெயராஜ் எழுதிய 27 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பல கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன; சில கட்டுரைகள் சிரிக்க வைக்கின்றன; அதேவேளையில், சில கட்டுரைகள் நம்மை அழ வைக்கின்றன. இதற்கிடையே, வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய தத்துவங்களும் சில கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. “பெரிய மாமி’‘ என்ற கட்டுரை தமிழ்ப் பெண் குலத்தின் மாண்பையும், பண்பாடு, கணவன் மீதான பாசத்தையும் பறைசாற்றுகிறது. கணவனுடன் வாழ்ந்தபோது பட்டுப்புடவை, நகைகள், அலங்காரங்களுடன் வலம் […]

Read more