63 நாயன்மார்கள்
63 நாயன்மார்கள், ஆலயப் பிரியர் சிவ. சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக். 496, விலை 300ரூ. சிவநெறி பரப்பிய, 63 நாயன்மார்களின் பணி மிகப் பெரிய சாதனை. சுந்தரமூர்த்தி நாயனார் சுருக்கமாக கூறியதை, சேக்கிழார் சுவாமிகள் ‘திருத்தொண்டர் புராணம்’ என்று விரிவாகச் சொன்னார். அக்காவியம் பின்னர் பெரியபுராணம் என வழங்குகிறது. அப்புராணச் செய்யுள்களுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க., கோவை சி.கே.சி., போன்றோர் விரிவுரை எழுதினர். அவற்றை எல்லாம் இக்கணினியுலகில் படிக்க வாய்ப்பில்லாதோர், மிக எளிய தமிழில் படிக்கத் தக்க முறையில் இந்நூல் வெளிவந்துள்ளது. சிவனடியார்களுக்குத் […]
Read more