பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன், யமுனா ராஜேந்திரன், பிரக்ஞை பதிப்பகம், பக்.168, விலை 130ரூ. உலக அளவில் வெளியான குழந்தைகள் பற்றிய திரைப்படங்களைப் பற்றிப் பேசும் நூல். வெறுமனே திரைப்படங்கள் குறித்தும், கதைச்சுருக்கம், நடிகர், நடிகையர் பற்றியும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்காமல், படம் உருவானதன் பின்னணி, கேமரா கோணங்களின் சிறப்பு, காட்சிகளின் முக்கியத்துவம் என்று பலவகையிலும் சிறப்பான திரைப்படங்களைப் பலமுறை பார்த்து, ஆராய்ந்து விரிவாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு. நெதர்லாந்து திரைப்படமான “பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்’‘ (1996) படத்தில், சொந்த மண்ணைப் பிரிவதனால் சமூகத்தின் மீது […]

Read more

சோதிடத்தில் பலன் காணும் முறை

சோதிடத்தில் பலன் காணும் முறை, இளங்கோவன், குருவருள் சோதிட ஆய்வு மையம், பக். 72, விலை 100ரூ. ஒரு ஜாதகத்தை கையிலெடுக்கும் ஜோதிடர், அடிப்படையில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. லக்கினத்தின் முக்கியத்துவம், பாவங்கள், அந்த பாவங்களை ஆளும் கிரகங்களின் காரகத்துவங்கள், அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் செயல்பாடுகள், பாவங்களைக் கண்டு ஜாதகங்களை ஆராயும் திறன் போன்றவற்றை அக்கறையுடன் எடுத்துக் கூறி எளிமையான உதாரணங்களுடன் இந்நூலைப் படைத்திருக்கிறார் இந்நூலாசிரியர். கிரகங்களுக்குரிய நட்பு, பகை கிரகங்கள், […]

Read more

வேதகணிதம்

வேதகணிதம், (உலகின் அதிவேக மணக்கணக்கு முறை), அன்பழகன் தேவராஜ், தமிழ் அங்காடி, பக். 188, விலை 165ரூ. கணிதம் என்றாலே மாணவர்கள் மத்தியில் ஒருவித வெறுப்பு இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அனால் கணிதத்தை முறையாகக் கற்றுக்கொண்டால் அதைவிட, சுலபமான பாடம் எதுவும் இருக்காது என்பதுதான் உண்மை. கோலம் முதல் கோயில் கோபுரம் வரை எல்லாவற்றிலும் கணிதம் நீக்கமற நிறைந்துள்ளதை அறிய முடியும். அனைத்துவித அறிவியல் துறை வளர்ச்சிக்கும், கோயில் வடிவமைப்புக்கும் கணிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய அவசர யுகத்தில் காகிதத்தையும், எழுதுகோலையும் கையாளுவது […]

Read more