சங்கத் தமிழ்க் கவிதை அழகியல்

சங்கத் தமிழ்க் கவிதை அழகியல், எம். அல்போன்ஸ், பொதிகை பதிப்பகம், பக்.320; விலை ரூ.300. சங்கத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் அழகியல் கூறுகள் பல்வேறு வடிவங்களில் விரவிக் காணப்படுகின்றன. அழகு என்ற சொல்லுக்கு இணையாக எழுபது சொற்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.  அழகியல் வெளிப்படுவதற்குக் கலைகள் முதன்மையான சாதனமாகும். அவற்றுள் இலக்கியக்கலை முதன்மை இடத்தைப் பெறுகிறது. இலக்கியக் கலையில் கவிதைக் கலை, கவிதையின் அழகு, கவிதையின் வடிவமைப்பு, பொருள், உத்திகள், கவிதை சுவைக்கான சொல்லும் பொருளும் ஆகியவை அமைகின்றன. செய்யுளில் அமைந்திருக்கும் சொற்கள், உவமைகள், ஒலிக்கூறுகள், […]

Read more

புனிதராற்றுப்படை

புனிதராற்றுப்படை, எம். அல்போன்ஸ், பொதிகை பதிப்பகம், சென்னை, பக். 104, விலை 80ரூ. சங்ககால ஆற்றுப்படை இலக்கியங்கள் அனைத்தும் இலக்கியக் கருவூலங்களாகும். சங்ககத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. இப்பத்துப்பாட்டில்தான் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை முதலிய ஆற்றுப்படை நூல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்தப் புனிதராற்றுப் படையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆற்றுப்படுத்துதல் என்றால், வழிப்படுத்துதல் என்றும், ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்தி அனுப்புதல் என்றும் பொருள். விறலியர், பாணர், கூத்தர், பொருநர் போன்றோர் தம் வறுமையைப் போக்கிக் கொள்ள வள்ளல்களிடம் சென்று, பொன்னும் […]

Read more