மலர்க் கிரீடம்

மலர்க் கிரீடம், கண்மணி பதிப்பகம், விலை 70ரூ. எழுத்தாளரும், சினிமா கதை வசனகர்த்தாவுமாகிய கண்மணி ராஜா முகமது எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு, முழுக்க முழுக்க காதலைப் பற்றியே பாடுகிறார். “தூங்கும்போது கனவில் விழித்திருக்கையில் நினைவில் எப்படித்தான் இவர்கள் நம்மைப் பிரிப்பார்களோ? ஒரு வண்ண மயிலை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்கள் என மேனகா காந்திக்கு மெயில் அனுப்ப வேண்டும் நீரின்றி அமையாது உலகு குறள் நீயின்றி அமையாது உலகு என் குரல் என்பன போன்ற கவிதைகள் நெஞ்சைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, நவம்பர், 2019. இந்தப் […]

Read more

அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்.

அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்., நாஞ்சில் பி.சி. அன்பழகன், கண்மணி பதிப்பகம், விலை 250ரூ. திரைப்பட இயக்குநரும் அதிமுக பேச்சாளருமான பி.சி.அன்பழகனின் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளின் தொகுப்பு. சினிமா, ஆன்மிகம், வரலாறு என்ற கூட்டுக் கலவையில் நடப்பு அரசியலின் காரமும் நெடியும் கொஞ்சம் தூக்கலாகவே உண்டு. நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more