கிருபானந்த வாரியாரின் தமிழ் அமுதம்
கிருபானந்த வாரியாரின் தமிழ் அமுதம், பெ.கு. பொன்னம்பலநாதன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108, பக்கக்ம் 256, விலை 125 ரூ. அறுபத்து நான்காவது நாயன்மார் என்று சைவப் பெருமக்களால் பாராட்டப்பட்ட கிருபானந்தவாரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையாகச் சொல்லும் நூல். வாரியார் தனது ஒன்பதாவது வயதிலேயே மேடையேறிப் பேசியதும், பன்னிரண்டாவது வயதிலேயே பத்தாயிரம் பாடல்களை மனப்பாடமாகப் பயின்றதும் மைசூர் சென்று வீணை வாசிக்கக் கற்றுக்கொண்டதும் சுவையான தகவல்கள். சைவ, வைணவ நூல்களைப் பயின்றதைப் போலவே வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் போன்றவற்றையும் அவர் ஆழ்ந்து பயின்றிருக்கிறார். […]
Read more