சொந்தச் சகோதரிகள்

சொந்தச் சகோதரிகள், கே. பாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. வலியின் கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்த தனது கதைகளை ‘சொந்தச் சகோதரிகள்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்திருக்கிறார் கே. பாரதி. எட்டு வயதில் திருமணம், 12 வயதில் கணவன் மரணம் என தன்னுடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தன்னுடைய நீண்ட கூந்தலை மழிப்பதற்காக உட்கார்ந்திருக்கும் பாகீரதியின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பிராமணக் குடும்பங்களில் விதவைப் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்தக் கதை கூர்மையாக விளக்குகிறது. ‘சுயம்’ எனும் […]

Read more

ஆர். சூடாமணி

ஆர். சூடாமணி, கே. பாரதி,  சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. கருத்து வேறுபாட்டால் தனித்தனியே பிரிந்து வாழ நினைக்கும் ஓர் இளம் தம்பதி, ஆதரவற்ற ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றும் நற்செயலில் ஈடுபடும்போது தங்களின் பிரிவும் கோபமும் பொருளற்றவை என்பதை உணர்ந்து மனம் மாறுகின்றனர் (பூமியினும் பெரிது), தன் வயதே உடைய சின்னப்பொண்ணு கழிவறை சுத்தம் செய்வதைப் பார்த்து மனம் கசியும் விஜயா அவளின் உண்மையான பெயரைக் கேட்க அவள் விஜயா என்று கூறுகிறாள். விஜயாவின் மனதில் ஒரு நிம்மதி (விஜயா), காரில் தனியே […]

Read more