கன்னியாகுமரிக் கோயில்

கன்னியாகுமரிக் கோயில், சி.பிரதாபசிங், காவ்யா, பக்.432, விலை 430ரூ. கன்னியாகுமரிக் கோயில் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம் இந்நூல். கன்னியாகுமரிக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி தெய்வத்தின் கோயிலின் வரலாற்றை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே கன்னியாகுமரிக் கோயில் இருந்திருக்கலாம் என்று கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் கோயிலைப் பற்றி ஆய்வு செய்கிறார். கோயில் தோன்றிய காலத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் கோயில்களில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார். இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளை […]

Read more