ஸ்ரீ அழகிய சிங்கனின் அற்புத ஆலயங்கள்

ஸ்ரீ அழகிய சிங்கனின் அற்புத ஆலயங்கள், கைலாசம் சுப்ரமண்யம், சீ.சுந்தரம், வானதி பதிப்பகம், விலை 300ரூ. திருமாலின் அவதாரங்களில் முக்கியமான அவதாரமாகக் கருதப்படும் நரசிம்மருக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் அமைந்துள்ள 200 -க்கும் மேற்பட்ட ஆலயங்கள் பற்றிய அரிய தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. பிரகலாதனை காத்தருளவும், ஹிரண்யகசிபுவை வதம் செய்யவும் அவதரித்த நரசிம்மர் பற்றிய விஸ்தாரமான குறிப்புகள், நரசிம்மர் ஆலயங்களின் தனித்தன்மை ஆகியவற்றைத் தந்து இருப்பதோடு, நரசிம்மர் நிகழ்த்திய அற்புதங்கள், நரசிம்மரை வழிபடுவதற்கான ஸ்தோத்திரங்கள் ஆகியவையும் இடம் பெற்று […]

Read more

வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை)

வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை) , சீ.சுந்தரம், வித்யுத் பதிப்பகம்,  பக்.584, விலை  ரூ.500. ஆண்டாளும் கிருஷ்ணனும் என்பதுதான் “வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும்’ என்று நூலின் தலைப்பாகியிருக்கிறது. திருப்பாவைக்கு விளக்கவுரை இந்நூல் என்று கூறுவதைவிட, மிக அற்புதமான தத்துவக் கருத்துகளை விளக்கும் அரிய ஆராய்ச்சி நூல் என்றே கூறலாம். ருப்பாவைக்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆறாயிரப்படி வியாக்கியானம், திருநாராயணபுரத்து ஆய் என்றழைக்கப்படும் தேவராஜர் வழங்கியுள்ள ஈராயிரப்படி மற்றும் நாலாயிரப்படி எனப் பல […]

Read more