பாலச்சந்திரனின் இறுதியுணவு

பாலச்சந்திரனின் இறுதியுணவு, சுகுணாதிவாகர், பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, வலை 50ரூ. நம் காலத்தின் கவிதைகள் சமகாலக் கவிதை அழகியல் மற்றும் கூர்ந்த அரசியல் உணர்வு இரண்டும் முயங்கும் கவிதைகளை எழுதிவருபவர் சுகுணாதிவாகர். பாலச்சந்திரனின் இறுதியுணவு என்னும் இந்த இரண்டாம் தொகுப்பில் இடையிடையே மிகவும் அந்தரங்கத் தொனியிலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சென்ற நூற்றாண்டில் எழுந்த தேசம், தேசியம், மொழி சார்ந்து உருவான அனைத்து லட்சியவாதங்களையும் கேள்வி கேட்கும் கவிதைகளாக இவரது கவிதைகள் இருக்கின்றன. எல்லாப் போர்களிலும், ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றப்படும்போதோ அழியும்போதோ அழிவது பெண் உடல்கள்தான் […]

Read more