நானும் நீதிபதி ஆனேன்

நானும் நீதிபதி ஆனேன், சுயசரிதை, கே. சந்துரு, அருஞ்சொல் வெளியீடு, பக்.480, விலை ரூ. 500. முப்பதாண்டுகள் வழக்கறிஞராகவும் சுமார் ஏழு ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துருவின் தன் வரலாறெனக் குறிப்பிடப்பட்ட வரலாற்றுப் பதிவுகளின் தொகுதி இது. நூலில் 22 தலைப்புகளில் தாம் எடுத்துக் கொண்ட பொருள்களின்வழி தன்னுடைய வரலாற்றை மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலகட்டத்தின் அல்லது பிரச்னையின் வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்கிறார் சந்துரு. எண்ணற்ற மனித உரிமை வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர்; மக்கள் கொண்டாடிய எண்ணற்ற தீர்ப்புகளை […]

Read more

பேராசிரியர் ஏசுதாசனின் என் நெஞ்சில் நின்றவை

என் நெஞ்சில் நின்றவை, முனைவர் ப.ச. ஏசுதாசன், தாசன் பதிப்பகம், சென்னை 63, விலை 125ரூ. ஒரு சாமான்யனும், தன் வரலாற்றை பதிவு செய்யலாம் என்ற கருத்தில் தமிழ்ப் பேராசிரியரான ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார். சிறந்த கல்லூரி ஆசிரியரான இவர், சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவற்றில் ஒரு பகுதி – எனக்கு சமயமும், தமிழும் இரு கண்களாகவே விளங்கின. ஒன்றைப் பெரிதும் விரும்பி, மற்றதைக் கைவிட்டதில்லை. பொருளாசை, பதவி ஆசை என்னை ஆட்கொண்டதில்லை… எனக்கு போலி முகமோ, பொய் முகமோ கிடையாது. […]

Read more