ஆண்டாள் அந்தாதி

ஆண்டாள் அந்தாதி, சுரா, செந்தமிழ் அறக்கட்டளை, விலைரூ.100 அந்தாதி பாடுவது மிகவும் கடுமையான சவால். ஆதி, அந்தம் என்ற சொற்களின் கூட்டணியே அந்தாதி. இவ்வகையில் முதல் செய்யுளான, ‘படிக்குப்படி கமலம் வைப்பேன், படிக்கும்படி பாடல் தருவேன்’ என்று துவக்கி, ‘அருள்மிகச் செய்வாய் அம்மா’ என முடிக்கிறார். அடுத்த பாடலில், அம்மாவின் மறு சொல்லான, ‘அம்மையே அருள்வளர் அழகே’ என துவங்குகிறார். இப்படியாக, 100 செய்யுள்கள் நீள்கின்றன. இந்த எளிய பாடல்களுக்கு பொருளும் தந்துள்ளது, பொறுப்புணர்வைக் காட்டுகிறது.  நன்றி: தினமலர், 6/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

பசும்பொன் கருவூலம் (தேவரின் அரசியல் மற்றும் ஆன்மிகக் கட்டுரைத் தொகுதி)

பசும்பொன் கருவூலம் (தேவரின் அரசியல் மற்றும் ஆன்மிகக் கட்டுரைத் தொகுதி), தொகுப்பாசிரியர்கள்: சு.சண்முகசுந்தரம், சுரா,  காவ்யா, பக்.300, விலை ரூ.300. தேசியமும், தெய்வீகமும் இரு கண்களென வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். காந்தியவாதியாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் தளபதியாகத் திகழ்ந்தார். சுதந்திரப் போராட்ட காலத்திலும் அதற்குப் பிறகும் அவர் ‘கண்ணகி’ இதழில் எழுதிய கட்டுரைகள், அவரது நேர்காணல்கள், அறிக்கைகள், வாழ்த்துரைகள் என அவரது படைப்புகளின் கருவூலத் தொகுப்பாகவே இந்தநூல் உள்ளது. ‘தமிழ்க்குலத்தின் தனிப்பெருந் திருநாள்’ எனும் கட்டுரையில்,“இன்றைய தமிழ்நாடு […]

Read more